தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பாளராக கலாநிதி பாபு சர்மா





 தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பாளராக கலாநிதி பாபு சர்மா நியமனம்.


தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளராக (ONUR)கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பாபுசர்மா, முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


குறித்த நியமனம் நிதி, சிறைச்சாலை அலுவலகம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளது. 


நாட்டின் தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வினை வலுப்படுத்தல், சக இனங்களுக்கு இடையில் சமாதானத்தையும் சகவாழ்வினையும் கட்டி எழுப்புதல் போன்றவற்றை நோக்காக கொண்டு அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வ மத நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக இவ் அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஒருங்கிணைத்தல் அடிப்படையில் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.