போருக்கு நடுவே இந்தியா, பாகிஸ்தான் உதவியுடன், ஆப்கானிஸ்தானில்கிரிக்கெட் வளர்ந்தது





 “சுதந்திரமாக விளையாடுகிறோம். நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மிகப்பெரிய கிரிக்கெட் வரலாறு எங்கள் தேசத்துக்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு தவறிலிருந்தும் நாங்கள் கற்று வருகிறோம். 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்திடம் தோற்றோம். 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 4 ஆண்டுகளில் எங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை வலிமையாக மாற்றியுள்ளோம்”


இது ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் குல்புதின் நயீப் கடந்த 2023 உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டி.


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.


ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டின் முக்கியத்துவம்

சமகால வரலாற்றில் தொடர்ச்சியான போர்களைச் சந்தித்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.


போர்கள் சூழ்ந்த தருணத்திலும் மக்களின் வேதனைகளை மறக்கடிக்கும் மருந்தாக இருப்பது ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றிகள்தான்.


அதிலும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பெரிய அணிகளை வெல்லும்போது மக்கள் தங்கள் இல்லத்தில் நடக்கும் சொந்த விழாவைப் போல் கொண்டாடுகிறார்கள்.


டி20 உலகக்கோப்பை: பாபர் ஆசமை கேலி செய்யும் பாகிஸ்தான் ரசிகர்கள் - சேவாக் புதிய யோசனை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பை: சூப்பர்-8 சுற்றில் போட்டிகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன? புதிய விதிமுறைகள் பற்றிய எளிய விளக்கம்

17 ஜூன் 2024

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தாலிபன்கள் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் வந்த காலத்தில், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தபோது, அவர்களுக்கு கிரிக்கெட்டை கற்றுக்கொடுத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உருவான ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வீரர்கள்

இத்தனைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும், கிரிக்கெட்டுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. 1839களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆப்கானிஸ்தானுக்கு கிரிக்கெட்டை அறிமுகம் செய்து விளையாடினார்கள். அதன்பின் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டை ஊட்டி வளர்த்தது பாகிஸ்தான்.


தாலிபன்கள் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் வந்த காலத்தில், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தபோது, அவர்களுக்கு கிரிக்கெட்டை கற்றுக்கொடுத்தது பாகிஸ்தான்.


ஆப்கானிஸ்தான் மக்கள் தாய்தேசத்துக்கு திரும்பியபின் அந்த தேசத்துக்கு தனியாக ஐசிசியில் இடம் பெற்றுக் கொடுத்து, அங்கீகாரத்தைப் பெற்றுத் தர உதவியதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான்.


ஆப்கானிஸ்தானுக்கு எந்த தேசத்தின் அணியும் கிரிக்கெட் விளையாட முன்வராத போது, அந்த நாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்றும், அந்த அணியை பாகிஸ்தானுக்கு அழைத்து கிரிக்கெட் விளையாடச் செய்து ஊக்கமளித்தது பாகிஸ்தான். 2001-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் (ஐசிசி), 2003-ஆம் ஆண்டில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் (ஏசிசி) ஆப்கானிஸ்தான் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.


ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடிய பின்புதான், ஐசிசி முழுநேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்பட்டது.


டி20 உலகக் கோப்பை: கோலி தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதை விமர்சிக்கும் ரசிகர்கள் - என்ன காரணம்?

13 ஜூன் 2024

ஜஸ்பிரித் பும்ரா: எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் மாயாஜால பந்துவீச்சாளர்

12 ஜூன் 2024

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,10 ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடிய பின்புதான், ஐசிசி முழுநேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானுக்கு அடையாளம் தந்த பிசிசிஐ

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் திறமை, திறன் மெருகேறியதற்கும், கிரிக்கெட்டில் அதிகமான இளம் வீரர்கள் உருவாகவும், அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) முக்கிய காரணமாக இருந்தது.


ஆப்கானிஸ்தான் ஐசிசி, ஏசிசி அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தபின், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், கிரிக்கெட்டை வளர்க்கவும் கூடுதலாக நிதியை ஒதுக்கியதில் பிசிசிஐ அமைப்பின் பங்கு முக்கியமானது.


ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் கிரிக்கெட் வளர்ச்சி பெரிய தடைகளைச் சந்தித்தது. கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்கும், தேசிய அணி வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க சரியான மைதானம் இல்லாமல், பயிற்சி வசதிகள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிரமங்களைச் சந்தித்தது.


இந்தச் சூழலில்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கைகொடுத்து அவர்களின் திறமையை வெளிக்கொணரச் செய்தது பிசிசிஐ அமைப்பு.


இந்தியாவில் உள்ள உலகத் தரம்வாய்ந்த கிரிக்கெட் பயிற்சி வசதிகளை ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கி உதவியது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு நுணுக்கம் மெருகேறியதற்கும், தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், பேட்டிங் நுட்பங்களை அறிந்து கொள்ளவும் இந்தியாவில் உள்ள பயிற்சி வசதிகள் பெருமளவு உதவின.


அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் விளையாடும் அங்கீகாரம் கிடைத்தபின் அந்த அணியால் டெஸ்ட் போட்டிகளை நடத்த சொந்த தேசத்தில்கூட இடமில்லாத நிலையைச் சந்தித்தது. இந்த நேரத்தில் இந்தியா, டேராடூனில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் விளையாட அனுமதித்து அந்த அணிக்கு தோள்கொடுத்து நின்றது.


அது மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னெள ஏக்னா மைதானத்தை தங்களின் சொந்த மைதானமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தது.


உத்தரப்பிரதேசத்தின் லக்னெள நகரில் முஸ்லிம்கள் அதிகம். அங்கு மக்களின் உணவுப் பழக்கம், அசைவ உணவுகளின் சுவை, பல்வகைகள் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு பிடித்துவிட்டதால், லக்னெள நகரை தங்களது சொந்த ஊர் போலக் கருதினர்.


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டை தீட்டிய ஐபிஎல் ‘பட்டறை’

ஆப்கானிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் திறமை மெருகேறுவதற்கும், கிரிக்கெட் நுணுக்கங்களையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் தேர்ந்த பயிற்சி எடுக்கவும் உதவியாக இருந்தது ஐபிஎல் டி20 லீக் என்பது முக்கியமானது. முதன்முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஐபிஎல் தொடரில் இடம் பெற்றது சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான். அதைத் தொடர்ந்து முகமது நபி, முஜுபிர் ரஹ்மான் என வரிசையாக வீரர்கள் வரத் தொடங்கினர்.


அதிலும் ஐபிஎல் டி20 தொடர் உலகில் பிற நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் லீக்கைவிட புகழ்பெற்றது, பரிசுகள், ஊதியம் வழங்கும் அளவிலும் பெரியது என்பதால், ஐபிஎல் தொடரில் ஒரு வெளிநாட்டு வீரர் விளையாடினாலே அனைத்து நாட்டு டி20 லீக்களிலும் விளையாட முடியும்.


ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலியா பிக்பாஷ் லீக், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கும், இடம் கிடைப்பதற்கும் ஐபிஎல் டி20 லீக் பெரிய தளத்தை அமைத்துக் கொடுத்தது.


பல்வேறு நாடுகளில் டி20 லீக்களில் பல்வேறு அணிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடும்போது, வெவ்வேறு பயிற்சியாளரின் பயிற்சியின் கீழ் விளையாடக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு பயிற்சியாளரும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வழங்கினர்.


ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் மட்டும் இருந்திருந்தால், அந்நாட்டின் பயிற்சியாளரின் கீழ் மட்டுமே பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சியின் நிலை ஒருவட்டத்துக்குள் சுருங்கிவிடும். ஆனால், உலகின் பல்வேறு டி20 தொடர்களில் ஆப்கானிஸ்தான் விளையாடும்போது, ஒவ்வொரு விதமான அணியில் இடம் பெற்று, அங்குள்ள பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்றபோது, ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங், சுழற்பந்துவீச்சு ஆகியவை கூர்மை பெற்றது.


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் திறமை மெருகேறுவதற்கும், கிரிக்கெட் நுணுக்கங்களையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் தேர்ந்த பயிற்சி எடுக்கவும் உதவியாக இருந்தது ஐபிஎல் டி20 லீக் என்பது முக்கியமானது

இந்தத் திறன்தான் சர்வதேச தளத்தில் ஜாம்பவான்கள் அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளிக்க முடிந்தது.


அதிலும் 2023-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் வீரர்களின் திறமைக்கு மிகப்பெரிய உறைகல்லாக அமைந்தது. இன்னும் ஆப்கானிஸ்தான் சாதாரண அணி அல்ல என்பதை தங்கள் வெற்றியின் மூலம் எடுத்துரைத்தனர்.


அதிலும் ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, நூர் அகமது, ஜாத்ரன், ஹஸ்ரத்துல்லா ஓமர்ஜாய், இப்ராஹிம் ஜாத்ரன், ரஹ்மத் ஷா ஆகியோரின் ஆட்டம் சர்வதேச அணிகளை வியப்புடன் பார்க்க வைத்தது.


2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளை வெல்ல முடியாமல் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியது. ஆனால், அடுத்த 8 ஆண்டுகளில் 2023ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்து தன்னை நிரூபித்தது ஆப்கானிஸ்தான்.


புளூடூத் ஹெட்போன் எப்போது வெடிக்கும்? வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

6 ஜூன் 2024

4,000 ஆண்டுகள் முன்பே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்ற எகிப்தியர்கள் - மருத்துவ உலகை புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு

2 ஜூன் 2024

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES

பயிற்சியாளர்களின் பங்கு

ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வளர்ச்சியில் பல்வேறு கால கட்டங்களிலும் பயிற்சியாளர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ், இந்திய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் லான்ஸ் க்ளுஸ்னர், இங்கிலாந்து முன்னாள் வீரர் கிராஹம் தோர்ப், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் ஆகியோரின் காலகட்டம் ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தது.


தற்போது இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜோனத்தன் டிராட் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. கடந்த 2022 மார்ச் மாதம் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபின் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்று வருகிறது.


பயிற்சியாளர் ஜோனத்தன் டிராட் ஒருமுறை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இன்றைய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. இன்று நீங்கள் பார்க்கும் ஆப்கானிஸ்தான் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை, நுணுக்கம், திறமை, டெஸ்ட் விளையாடும் அணிகளும் தோற்கடிக்கும் ஊக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.


600 ஆண்டுகளுக்கு முன் 64 ஆண் குழந்தைகளை பலியிட்ட மாயன் இன மக்கள் - ஏன்?

17 ஜூன் 2024

உலகின் மிக ஆபத்தான சிறையிலிருந்து ஒரு ஸ்பூன் உதவியுடன் தப்பிய மூவர் குறித்து இன்னும் மர்மம் ஏன்?

16 ஜூன் 2024

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருக்கும் பிரேவோ

‘ஒரு ரூபாய்கூட வாங்காத ஜடேஜா’

2023ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான பல வெற்றிகளைப் பெறுவதற்கு ஆலோசகராக இருந்த இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவின் பங்கு என்று அப்போதே பாராட்டப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் மட்டும் இரட்டை சதம் அடிக்காமல் இருந்திருந்தால், ஆப்கானிஸ்தான் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கும்.


அஜெய் ஜடேஜா தான் மென்டராக ஆப்கானிஸ்தான் அணிக்கு பணியாற்றியதற்கு கைமாறாகவோ, ஊதியமாகவோ இதுவரை அந்நாட்டு அணி நிர்வாகத்திடம் இருந்து ஒரு ரூபாய்கூட பெறவில்லை என்பது வியப்புக்குரியது.


ஆப்கானிஸ்தான் அணியின் சிஇஓ நசீப் கான், அரேபியன் நியூஸுக்கு அளித்த பேட்டியில் “ 2023ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட மென்டராக செயல்பட்ட ஜடேஜாவின் பங்கு சிறப்புக்குரியது. ஒவ்வொரு முறையும் ஜடேஜாவை நான் சந்தித்தபோதெல்லாம் ஊதியத்தை வலுக்கட்டாயமாக அளித்தபோது, பலமுறை அதைப் பெறுவதற்கு ஜடேஜா மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஒரு ரூபாய்கூட ஊதியமாக ஜடேஜா பெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச அரங்கில் சிறப்பாகச் செயல்பட்டாலே அதுதான் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெகுமதியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்தார்


இதுபோன்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியை கைதூக்கிவிட பயிற்சியாளர்களும் தங்களின் பங்களிப்புகளை அளித்துள்ளனர்.