மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப நிர்மாண வேலைகள்




 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 


மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலின் வேண்டுகோளுக்கிணங்க,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை மற்றும் காரைதீவு உள்ளிட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப நிர்மாணத்துக்கு ஐந்து மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த கட்டிட வேலைக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (14)இடம்பெற்றது. 

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலாச்சார மண்டப நிர்மாண வேலைத் திட்டதினை ஆரம்பித்து வைத்தார்.

பள்ளிவாசல் தலைவர் முனாப்,செயலாளர் பெளமி,மெளலவி பாரிஸ்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் அஷாம் அப்துல் அஸீஸ்,காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர்,பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் வை.எல். எம்.நியாஸ்,மாவடிப்பள்ளி விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள்,ஊர் முக்கியஸ்தகர்கள் பொது மக்கள்,நலன் விரும்பிகள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.