(எஸ்.அஷ்ரப்கான்)
சம்மாந்துறை மக்கள் கடந்தகாலங்களில் விட்ட தவறுகளை இனியும் விட முடியாது. நமது கைகளை பலப்படுத்த அவர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடும்போது,
எமது பிரதேசம், எமது சமூகம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் நிலை மாற்றப்பட வேண்டுமா? அதற்கு நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்து களமிறங்க காத்திருக்கின்றோம். அதனூடாக பல்வேறு அபிவிருத்திகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எமக்குண்டு.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய திட்டங்களை நாம் வகுத்து வைத்திருக்கின்றோம். குறிப்பாக சம்மாந்துறை மக்கள் கடந்தகாலங்களில் விட்ட தவறுகளை இனியும் விட முடியாது. நமது கைகளை பலப்படுத்த அவர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
Post a Comment
Post a Comment