திங்கள்கிழமை (ஜூன் 17) காலை 9 மணியளவில், திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கம், கொல்கத்தாவின் சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் (13174), மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி அருகே ஒரு சரக்கு ரயிலுடன் மோதியது.
இந்த விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இவ்விபத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர், என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Post a Comment
Post a Comment