மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் ,ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு




 


(வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

இந் நிகழ்வு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி செயலக காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது .

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவத்தை ஏற்றுக்கொண்டு சுமார் 30 பேர் இணைந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இணை தொகுதி அமைப்பாளரும்,
 கல்வி அபிவிருத்தி சங்கத்தின் இணைப்புச் செயலாளரும், ஐக்கிய இளைஞர் சக்தியின் மாவட்ட செயலாளருமான  வெள்ளையன் வினோகாந்த் விடுத்த அழைப்பை ஏற்று  அம்பாறை மாவட்டத்திற்குரிய மொட்டு கட்சியின் பிரதிநிதிகளான தமன பிரதேச சபையைச் சேர்ந்த முன்னாள் உபதவிசாளர் வெனுர பிரகீத், நாமல் ஒய பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர் டபிள்யூ .விஜேவந்த, உகன பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர்.ரவீந்ர ருபசிங்க மற்றும் விமலவீர திசாநாயக்க முன்னாள் அமைச்சருடைய அமைச்சரவை ஊழியர்கள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக கசும்  உட்பட மொட்டு கட்சியினுடைய வேட்பாளர்கள், கிராமமட்ட தலைவர்கள், என சுமார் 30 அங்கத்தவர்கள்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச  முன்னிலையில்  இணைந்து கொண்டனர்.

எதிர்கால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் சஜித் பிரமதாசாவை வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதாக அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.

 அது மாத்திரம் இன்றி அம்பாறை மாவட்டத்தில் ஏனைய கட்சிகளில் அங்கத்துவம் வகிப்பவர்களையும் சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்காக களப்பணியில் ஈடுபட முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். உண்மையில் இந்த செயற்பாடுகளால் எதிர்கால ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச  வருவது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்  வினோகாந்த்  இதன் போது தெரிவித்தார் எனவே ஏனையவர்களும் சஜித் பிரேமதாஸ  கடந்த காலங்களில் ஜனாதிபதி பதவியோ பிரதமர் பதவியையோ ஏற்றுக் கொள்ளவில்லை என குறை கூறியவர்கள் அனைவருக்குமான ஒரு செய்தியாக தற்பொழுது இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வாக்குகளை சஜித் பிரமதாஸவுக்கு வழங்கி அவர்களை ஜனாதிபதி ஆகும் படியாகவும் மேலும் எமது நாட்டில் காணப்படக்கூடிய அடிப்படைத் தேவைகள் பொருள் விலை உயர்வுகள் ஏழைகளின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் போன்ற காரியங்களில் இருந்து நாங்கள் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சஜித் பிரேமதாச  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆக வரும் பட்சத்தில் நாட்டு மக்களுக்கான சுபிட்சமான வாழ்வு நிச்சயம் மலரும் என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்.