( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவிற்கான உபயகாரர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று (19) புதன்கிழமை நடைபெற்றது.
உகந்த மலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் யூலை 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யூலை 22 ஆம் தேதி சமுத்திர தீர்த்தத்துடன் நிறைவடையவிருக்கிறது.
லகுகல பிரதேச செயலக ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில்
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. கு. சீதாராம் குருக்களினால் திருவிழா சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டது.
வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவம் யூலை மாதம் 05 ம் திகதி பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு 06ஆம் திகதி காலை 11மணியளவில் கொடி யேற்ற பூஜை இடம்பெறும். ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா முன்னிலையில் பிரதம குரு சிவ ஸ்ரீ சீதாராம் குருக்கள் கொடியை ஏற்றி வைப்பார்கள்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உற்சவ திருவிழா பூசைகள் இடம்பெற்று இறுதி நாள் 22ஆம் திகதி சமுத்திர தீர்த்தம் இடம் பெறவிருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து வைரவர் பூசை இடம் பெறும்.
விசேடமாக 12 ஆம் தேதி அன்று காலை கும்பாபிஷேக தின சங்கபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment