அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையில் மூவின மக்களையும் உள்ளடக்கிய பொசன் பெரஹர




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அக்கரைப்பற்று ஸ்ரீP தம்மரெத்தின சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம ஆலோசனைக்கேற்ப ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையின் விகாரதிபதி தேவகொட சோரத்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் பங்களிப்போடு அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையில் மூவின மக்களையும் உள்ளடக்கியதாக நேற்று மாலை இடம்பெற்ற பொசன் மிகுந்து மகா பெரகராவில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் மூன்றாவது முறையாக மிக பிரமாண்டமான முறையில் மூவின மக்களையும் உள்வாங்கி இனநல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இடம்பெற்ற பொசன் மிகுந்து மகா பெரகராவில் புனித சின்னங்கள் அடங்கிய பேழை தாங்கிய இரு யானைகளும் பவனியாக சென்றதுடன் தமிழ் சிங்கள கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாக அமைந்தது.
இதில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்த நடனங்கலைஞர்கள் மாணவர்கள் என பலரும் பங்குபற்றியதுடன் பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையில்  இடம்பெறும் விசேட பூஜையின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ; ஆரம்பமான பெரகரா பிரதேச செயலக மகாகணபதியை தரிசித்து சாகாம வீதி ஊடாக அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து கல்முனை வீதி ஊடாக கொமர்சியல் வங்கி சந்தியை அடைந்து பொத்துவில் வீதி ஊடாக திரும்பி விகாரையினை அடைந்தது.
பின்னர் விகாரையின் உள்ளே அங்கு இடம்பெற்ற விசேட பூஜையுடன் நிறைவுற்றது.
இதேநேரம் பெரகராவில் கலந்து கொண்டவர்களுக்கான தாகசாந்தி ஏற்பாடுகளும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் மற்றும் உள்ளிட்டவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பெரகஹராவிற்கான ஒத்துழைப்பை இப்பிரதேச வாழ் மூவின மக்களும் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.