(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந் நியமனத்தை வழங்கி இருக்கின்றது .
எலவே மேலதிக அரசாங்க அதிபராக இருந்த வேதநாயகம் ஜெகதீசன் பதவி உயர்வு பெற்று போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சுக்கு செல்கின்ற காரணத்தினால் இந் நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது .
2007 இல் இலங்கை நிருவாகசேவையில் இணைந்து கொண்ட காரைதீவைச் சேர்ந்த சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்த வேளையிலே கல்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி இருந்தார்.
2013 இல் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு அங்கு சிறப்பான பணியாற்றி வந்த வேளையில் 2019 மீண்டும் காரைதீவுக்கு நியமிக்கப்பட்டார்.
ஐந்து வருட கால சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அவர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இவரது தெரிவுக்காக சரமாரியாக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இவரது இடத்திற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி சஜிந்ரன் இராகுலநாயகி பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment