:கவலையுடன் பெருநாள் கொண்டாடும் நாம் பலஸ்தீனுக்காக பிராத்திப்போம் :





 கவலையுடன் பெருநாள் கொண்டாடும் நாம் பலஸ்தீனுக்காக இருகரமேந்தி பிராத்திப்போம் : பெருநாள் வாழ்த்தில் ஹரீஸ் எம்.பி


தியாகத்தையும், பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் முன்னோக்கி எடுத்துக்காட்டும் ஹஜ்ஜுப் பெருநாளை இலங்கையில் கொண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிங்களுக்கும், சர்வதேச அளவில் கொண்டாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் மேலும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாக இந்த ஹஜ்ஜுப்பெருநாள் அமைந்திருந்தாலும் கூட இஸ்ரேலிய அரக்கர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் பலஸ்தீன உறவுகளை எண்ணி இந்த பெருநாள் தினத்திலும் உலக முஸ்லிங்கள் கவலையில் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பலஸ்தீன பூமியில் நடக்கும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் சர்வதேச அரங்குகள் ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் இருக்கும் இந்த சூழ்நிலையில் நிம்மதியாக, சந்தோசமாக இந்த தியாகத்திருநாள் பெருநாளை கொண்டாட முடியாதவர்களாக இருக்கிறோம்.

பலஸ்தீன உறவுகளுக்கு கரங்கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய ஆதரவு நிறுவனங்களின் உணவுகள், பானங்கள், தயாரிப்புக்களை எமது பெருநாள் கொண்டாட்டங்களில் சேர்த்துக்கொள்ளாமல் விடுமாறும் பலஸ்தீனை அழிக்க இஸ்ரேலுக்கு உதவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த எந்தவகையிலும் நாம் அந்த நிறுவனங்களுக்கு துணைபோகாமல் அவர்களின் தயாரிப்புக்களை நிரந்தரமாக பகிஷ்கரிக்குமாறும் முஸ்லிம் உம்மத்தை இந்த செய்தியூடாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இஸ்லாம் போதித்த நல்லிணக்கம், சகோதரத்துவம் ஓங்கி எமது நாட்டை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல எல்லோரும் ஒன்றிணைய முன்வருவதுடன் பலஸ்தீனம், உட்பட உலகின் சகல பாகங்களிலும் கஷ்டப்படும், கொடுமைகளையும், அநீதிகளையும் சந்திக்கும் எமது உம்மத்துக்களின் மகிழ்ச்சிக்காவும், நிம்மதிக்காகவும் இந்த தியாக திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிராத்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.