இரண்டாம் கட்ட அரிசி வழங்கும் நிகழ்வு





 (வி.ரி.சகாதேவராஜா)



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட அரிசி வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர்  சிவ. ஜெகராஜன்  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  சிந்தக்க அபேவிக்கிரம  பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .

இதன் போது மாவட்ட மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.