நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை இடம்பெற்றது.
ரிதிதென்னை குளத்திற்கு அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் குளக்கட்டில் சறுக்கி விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மரணமடைந்த இளைஞனின் உடலை பிரதேச மீனவர்கள் கண்டெடுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்த இளைஞன் ரிதிதென்னை புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சாலி முகம்மது றிஹாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment