கல்லடியில் சர்வதேச யோகா தினம்!





 ( வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (21) வெள்ளிக்கிழமை காலை கல்லடி சிவானந்த வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் ஆகியோர் முன்னிலையில் இந் நிகழ்வு காலை 6 மணி முதல் நடைபெற்றது.


 பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட  சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

இந்த யோகா பயிற்சியை பயிற்றுவிப்பாளர்களான சிவலிங்கம் ஸ்ரீதரன், அழகுராஜா ஜெயகரன் ஆகியோர் நடாத்தினர்.
சுமார் 250 பேர் யோகா பயிற்சியை காலை 6 மணி முதல் ஏழு மணி வரை சூரிய ஒளியில் பெற்றார்கள்.