ஐக்கிய மக்கள் சக்தி, கடந்த காலங்களில் தனது அரசியல் நீரோட்டத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டதால் பல்வேறு பாடங்களை கற்றுள்ளது. எனவே எதிர்காலத்தில் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை விடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். ரஸ்ஸாக் தெரிவித்தார்.
இன் நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம். அல் இஹ்ஸான் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி எம்.எஸ். ரஸ்ஸாக், தற்போதைய சூழலில் கூறப்படும் கருத்துக் கணிப்புக்கு அமைவாக ஐக்கிய மக்கள் சக்தி 54% வீதத்துக்கு மேலான ஆதரவை பெற்று முன்னிலை வகிக்கின்றது. இவ்வாறான நிலையில், நமது கட்சியை பலவீனப்படுத்த பல்வேறு சக்திகள் முனைகின்றன. இருந்தபோதும் நாட்டு மக்கள் தெளிவான நிலையில் இருக்கின்றனர். கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களான நாங்கள் மிகுந்த அவதானத்துடன் நமது பணிகளை முன்னெடுக்க வேண்டும். கட்சி மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும் சேறுபூச முனைபவர்களுக்கு தகுந்த விளக்கங்களை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சில உள்ளூர் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாக கட்சி அடைந்த பின்னடைவுகளை தலைமையிடமும் சம்மந்தப்பட்டவர்களிடமும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம் அவைகளை அவர்கள் எற்றுக்கொண்டுள்ளர்கள் கடந்தகாலங்களில் விடப்பட்ட தவறுகளை எதிர்காலத்தில் கட்சி விடாது என தலைமை எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது என்றும் பிரதேச அபிவிருத்தி மற்றும் கட்சியில் கௌரவம் போன்றவற்றை உரிமையுடன் அனுபவிக்க வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற தேசிய கட்சிகளுடன் இணைந்திருப்பதன் ஊடாகவே பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் கல்முனைத் தொகுதி இணைப்பாளர் ஆமீதுலெப்பை அப்துல் கபூர், கட்சியின் தலைமைக்கு துரோகம் செய்தவர்களுடன் மீண்டும் ஓர் இணைப்பை ஏற்படுத்த சிலர் முயச்சிப்பதாகவும் சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஒட்டாது என்ற முதியோர் வாக்குக்கு அமைய அவர்களது எண்ணம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஆண்ட கல்முனை தொகுதி தற்போது சோபையிழந்து காணப்படுவதாகவும் கல்முனைக்கு உரிய அமைச்சுப்பதவியை ஹக்கீமும் றிஷாத்தும் பறித்துச் செல்வதாகவும் இவ்வாறானதொரு நிலைக்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம். அல் இஹ்ஷான் அவர்கள், எதிர்வரும் காலங்களில் நாங்கள் கட்சியின் செயற்பாடுகளை மிகுந்த வீரியத்துடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதற்காக வழங்கப்பட்டுள்ள பதவிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்று அதனூடாக பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு வழியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது பின்வருவோருக்கு குறித்த துறைகளுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.
01. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி முகாமையாளராக முகைதீன்பாவா அப்துல் றஹீம்.
02. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் கே.எம். ஆதம்பாவா (மன்சூர்).
03. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரச்சார செயலாளர் முகம்மட் இப்ராகிம் முகம்மட் றஜாப்டீன்.
04. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி ஊடக செயலாளர் ஜௌபர் முகம்மட் பாஹிம்.
05. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி சட்ட செயலாளர் சட்டத்தரணி நூறுல் அமீன் முகம்மட் அஷாம்.
06. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் செயலாளர் சுபைதீன் முகம்மட் சிரோஜன்.
07. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி இந்து செயலாளர் பூபாலப்பிள்ளை தாமோதரம்.
08. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி கத்தோலிக்க செயல்லாளர் ராஜகுமார் பிரகாஷ்.
09. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி இஸ்லாமிய செயலாளர் சுலைமாலெப்பை ரவாப்.
10. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி தொழிற்சங்க செயலாளர் மீராலெப்பை முகம்மட் ஜமால்டீன்.
11. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரின் செயலாளர் மீரா லெப்பை இப்னு மஸூத்.
12. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி வர்த்தக சங்கங்களின் செயலாளர் ஆதம்பாவா அப்துல் சலீம்.
13. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி ஓட்டோ சங்கங்களின் செயாலாளர் முகம்மட் பாறூக் முகம்மட் இம்தாஸ்.
14. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர் ஆமீதுலெப்பை அப்துல் கபூர்.
15. கல்முனை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி மீனவர் சங்கங்களின் செயலாளர் சின்னலெப்பை நாகூரார்.
Post a Comment
Post a Comment