நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து 2023 கல்வியாண்டில் கலை பிரிவில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் செல்ல தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் இன்று (04) பாடசாலையில் இடம் பெற்றது.
க.பொ.த உயர்தர பிரிவு பகுதித் தலைவர் யூ.எல். செய்னுலாப்தீன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தினர்களினால் சிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உதவிய அதிபர்கள், உயர்தர பிரிவு ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment