இலங்கையின் Baseball இளம், வீரர் உயிரிழந்த சம்பவம்
இலங்கையின் பிரபல பேஸ்போல் இளம் வீரர் கேஷான் மதுஷங்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (22) இடம்பெற்ற வாகன விபத்திலேயே கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேஷான் மதுஷங்க, கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார்.
அண்மையில் சீனாவில் (China) நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் கேஷான் மதுஷங்கவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment