72 மணிநேர தடுப்புக்காவலில் ஒஸ்மன் புஸ்பராஜ்




 


கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஒஸ்மன் புஸ்பராஜை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தெமட்டகொட ஒஸ்மன் புஷ்பராஜ், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியின் கூட்டு நடவடிக்கையில் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் அவரை 72 மணிநேரம் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.