கட்டிட நிர்மாண அபிவிருத்தி பணிகளுக்காக நிதி




 


நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டிட நிர்மாண பணிகளுக்கென ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ். கலீஸ், செயலாளர் எம்.எஸ். சஹுதுல் ஹலீம், பொருளாளர் எஸ்.எச். அபுல் கலாம் ஆகியோர் அடங்களாக பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் மருதமுனை மக்களின் பிரச்சினைகள், குறை நிறைகளை ஆராய்ந்ததுடன், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் இதன்போது மருதமுனை பளீல் மௌலானா பௌண்டஷனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்களையும் பௌண்டஷனின் நிறைவேற்று குழுவினரிடம் ஹரீஸ் எம்.பி கையளித்தார்
இதன்போது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எஸ். உமர் அலி, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மருதமுனை கபீர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.