மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா சந்திப்பு
நூருல் ஹுதா உமர்
கல்முனைக் கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட வலய மட்டத்திலான பரீட்சை தொடர்பாக சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் காரைதீவு கல்விக் கோட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் இன்று (2024.05.09) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான மாகாண மட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் இவ்விடயம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்.
இக்கூட்டத்தில் கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதி, உதவி அதிபர்கள், தரம் 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment