பிரியாவிடை




 (


வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக ஆறு வருடங்கள் கடமையாற்றிய
ஏ.எல் .அப்துல் மஜீத் அக்கரைப்பற்று வலயத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வதையிட்டு பிரியாவிடை வைபவம் நடைபெற்றது.

 சம்மாந்துறை வலய நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யசீர் அரபாத் மொகைடீன் தலைமையில் நேற்று (30) செவ்வாய்க்கிழமை பிரியாவிடை நிகழ்வு பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 அச்சமயம் பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி ஏசி.நுஸ்ரத் நிலோபரா, எச்.
நைரூஸ்கான், பி.பரமதயாளன் ஆகியோரும் பிரசன்னமாக இருந்தார்கள்.

சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் 
மஜீத் சம்மாந்துறை வலய கல்வி வளர்ச்சியில் ஆற்றிய அருஞ் சேவைகளை பாராட்டி அங்கு பலராலும் பேசப்பட்டது.

 பணிப்பாளர்களுடன் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் எம் எம்.  ஜௌபர்,  வளவாளர் எஸ் எல்.அப்துல் முனாப் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இறுதியில் பணிப்பாளர் மஜீத் நெகிழ்ச்சியான மனநிலையில் ஏற்புரையாற்றினார்.