மகளை கொடூரமாகத் தாக்கி காணொளி பதிவு செய்த தந்தைக்கு, விளக்க மறியலில்




 


பலாங்கொட பெட்டிடிகல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி வெளிநாடு சென்ற பின்னர் தனது மகளை கொடூரமாக தாக்கி வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மனைவி ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், சிறுமியை கவனித்துக் கொள்வதற்காக குறித்த நபரிடமும் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சிறுமி அவரது தந்தையால் தாக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் ஹெஷானி ரொட்ராகோ இன்று (03) உத்தரவிட்டார்.