தமிழரை ஏறி மிதித்தால் கோட்டாவின் நிலையே ரணிலுக்கும் ஏற்படும் - சம்பந்தன் கடும் எச்சரிக்கை
📍
நினைவேந்தல் நிகழ்வை எவரும் தடுக்கவே முடியாது. தமிழரை ஏறி மிதித்தால் கோட்டாவின் நிலையே ரணிலுக்கும் ஏற்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாக இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை, சம்பூர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இறுதிப் போரில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவேந்த தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு. அதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்தி வருகின்றார்கள். அந்த நிகழ்வை எவரும் தடுக்கவே முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சொல்லிவைக்க விரும்புகிறேன் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Post a Comment
Post a Comment