தேசிய இளைஞர் வெசாக், தானம்




 


வி.சுகிர்தகுமார் 0777113659    


 இலங்கை தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து நடாத்திய தேசிய இளைஞர் வெசாக் தன்சல் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் அக்கரைப்பற்று விஜயராம விகாரை ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற தயிர் தாகசாந்தி வழங்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று விஜயராம விகாரையின் விகாராதிபதி தேவகொட சோரத்த தேரர் கலந்து கொண்டார்.
இதன்போது இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தன்சல் நிகழ்வை சிறப்புற நடாத்தி வைத்;தனர்.
இரு பிரிவுகளாக இரு இடங்களில் இடம்பெற்ற தயிர் தாகசாந்தி நிகழ்வில் பல் சமூகங்களை சேர்ந்த அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்