ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மேதின கூட்டம், அக்கரைப்பற்றில்




 


(வி.சுகிர்தகுமார்) 0777113659  


 ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மேதின கூட்டம் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் உள்ள ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அலுவலக மண்டபத்தில் இன்று (01) நடைபெற்றது
உரிமைக்காய் உரக்கச் சொல்வோம் எனும் தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தொழிற்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் ராஜ ராஜேந்திரா முன்னாள் அதிபர்; இரத்தினவேல் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட செயலாளர்; கனகரெத்தினம் கால்நடை பாற்பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க செயலாளர் வி.கோகுலன் உள்ளிட்;ட சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் முக்கியஸ்தர்கள் எதிர்கால திட்டம் தொடர்பில் உரையாற்றியதுடன் உலக உழைப்பாளர் நாள் 2024 இன் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அயராது உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் விழிபிதுங்கி வாழ்வதா? சாவதா? எனும் விரக்தியின் விழிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையக தோட்டத்தொழிலாளர் நலன் பாதுகாப்பு விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படல் கால்நடை பாற்பண்ணையாளர்களின் அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் உள்ள மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு காணல் கடல் வளம் வேறு நாட்டவர்களால் சூறையாடப்படாமல் பாதகாத்தல் போன்ற தீர்மானங்களும் இப்பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.