அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில்சின்னம் சூட்டும் நிகழ்வு,




 


அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் விமர்சையாக நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

................................


எமது எதிர்கால மாணவச் செல்வங்களை புறக் கீர்த்திய செயற்பாடுகளினூடாக ஒழுங்குபடுத்தி அவர்களை சமநிலை ஆளுமை கொண்ட தலைவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் மாற்றியமைத்தல் என்கின்ற தொனிப் பொருளுக்கமைவாக கல்லூரியின் முதல்வர் AH.பௌஸ் (SLEAS) அவர்களின் வழிகாட்டுதலில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் புதிய மாணவத் தலைவர்கள் தெரிவானது பாடசாலை ஒழுக்காற்றுக் குழு மூலமாக மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான சின்னங்கள், அடையாள அட்டைகள் ,நியமனக்கடிதங்கள் என்பன வழங்குகின்ற நிகழ்வு பாடசாலைக்கேயுரிய பாணியில் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களின் தலைமையில் இன்று 22/05/2024 பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் பிரதிநிதியாக வீதிப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ருவன் தர்மபால (IP) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


மற்றும்,விசேட அதிதிகளாக கல்லூரியின் பிரதி அதிபர்களான AM.மிஸ்வர் (SLPS),AL.நஸீபா (SLPS),MA.ஸலாகுதீன் (SLPS) ஆகியோரும் உதவி அதிபர்களான M ஸம்ஸ் ரபா,MIL.ஜாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இன்றைய காலை ஆராதனை வேளையில் பாடசாலை பேண்ட் வாத்தியம் முழங்க சாரணிய மாணவர்கள் மூலமாகவும்,ஏனைய மாணவர்கள் மூலமாகவும் அதிதிகள் முன் நுழைவாயிலில் இருந்து கேட்போர் கூடம் வரை அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் கரங்களால் மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களும் அடையாள அட்டைகளும் நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வினை ஒழங்கமைத்த கல்லூரி இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான  பிரதி அதிபர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ் (SLPS) அவர்களுக்கும் ஒழுக்காற்றுக்குழு செயலாளர் MAG.பிர்னாஸ் ஆசிரியர், ரஜிஸாத் ஆசிரியர் ஆகியோருக்கும் மற்றும் மண்டப ஒழுங்கினை மேற்கொண்ட ALM.இல்யாஸ் ஆசிரியர் அவரோடு இணைந்து செயற்பட்ட மாணவர்களுக்கும் நிகழ்வினில் கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் என யாவருக்கும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்கள் தனது நன்றிகளை தெரிவிப்பதுடன் புதிய மாணவத் தலைவர்கள் சிறப்பாக செயற்பட்டு கல்லூரியின் பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு ஒழுக்கம் மிகுந்தவர்களாகவும் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாவும் நடந்து அவர்களை நல்வழிப் படுத்த தனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றார். 


#MCC MEDIA