மலேசிய உயர்ஸ்தானிகரினால் கல்முனையில் பள்ளிவாசல் திறந்து வைப்பு !





 (எம்.என்.எம்.அப்ராஸ்) 


கல்முனை கிறீன்பீல்ட் பள்ளிவாசல் நிருவாகிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்முனை கிறீன் பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜித் புனர் நிர்மானப்பணிகள் கட்டம் கட்டமாக நிறைவு செய்யப்பட்டு புனரமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறந்து வைக்கப் பட்டது.

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு வருகை தந்திருந்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் அதிமேதகு பட்லி ஹிஷாம் ஆதம் அவர்களினால் பள்ளிவாசல் நேற்று(18)திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அவர்களின் பாரியார்,கொழும்பு YWMA தலைவி பவாஸா தாஹா உட்பட அதன் நிருவாகிகள், மனித உரிமைகள் அமைப்பு லங்கா நிருவாகப் பணிப்பாளர் எம்.என்.எம்.அஸீம்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் பிரதிநிதிகள்,உலமாக்கள்,முஹ்யித்தீன் மஸ்ஜித் நிருவாகிகள்,ஏனைய பள்ளிவாசல் நிருவாகிகள்,நலன் விரும்பிகள்,மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.