ஏறாவூர் நகர சபை செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் அவர்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தினால் விதிக்கப்பட்ட அரச கடமையை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தின் அடிப்படையிலேயே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அனுமதிக்கு மாறாகவும் அனுதியின்றியும் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கட்டிடம் தொடர்பில் நகர சபையின் செயலாளரினால் மேற்கொள்ள வேண்டிய கடமையினைச் செய்யத் தவறியதன் அடிப்படையில் முறைப்பாட்டுக்காரர் நுபைர் சார்பாக சட்டத்தரணி முஹம்மட் சப்றாஸ் என்பவரினால் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ் வழக்கின் எதிரியான ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் அவர்களை 31.05.2024ம் திகதியன்று ஏறாவூர் நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பானையும் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment