பாதயாத்திரை குழுவினர்,புல்மோட்டை வந்திருக்கின்றார்கள்




 


 (வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சந்நதி- கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நேற்று முன்தினம் (25) சனி
மாலை கொக்கிளாயில் இருந்து இயந்திரப் படகுகள் மூலம்  புல்மோட்டை வந்திருக்கின்றார்கள்.

சுமார் எட்டு படகுகளில் இருபது நிமிட நேரத்தில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தை கடலால் கடந்தனர். அவர்கள் 
கொக்கிளாயிலிருந்து தென்னமரவாடிக்கு படகுகளில் வந்து அங்கிருந்து 16 கிலோமீட்டர் தூரம் நடந்து புல்மோட்டையை அடைந்தனர்.

இல்லாவிட்டால் 
தரை வழிப் பாதை எனின் சுமார் 38 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.
 
 கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை நேற்று 15-வது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

 கதிர்காம பாதயாத்திரை பேரவையின் தலைவர்  ஜெயாவேல்சாமி தலைமையில் இந்த குழுவினர் வந்து கொண்டிருக்கின்றார்கள் .

மொத்தமாக 124 அடியார்கள் இந்த பாதயாத்திரை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். 


இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையான சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி தலைமையிலான குழுவினர் 15 நாட்களின் பின்னர்  சனிக்கிழமை அன்று  கொக்கிளாயை
அடைந்தனர்.

நேற்று (26)  ஞாயிற்றுக்கிழமை திரியாயை அடைந்த அவர்கள்  இன்று (27) திங்கட்கிழமை நிலாவெளியை அடைவார்கள்.