வரலாற்று ரீதியான முன்னேற்றத்தில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி





 வரலாற்று ரீதியான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்துள்ள அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

.......................................


இன்று ( 31/05/2024) இலங்கை பரீட்சைத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பெறுபேறுகள் வரலாற்று ரீதியான முன்னேற்றத்தைக் காட்டி நிற்கின்றது.


அதற்கிணங்க எமது பாடசாலையில் இருந்து ஒவ்வொரு துறையிலும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் விபரம் வருமாறு


1.மருத்துவத்துறை-09

2.பொறியியல் துறை-07

3.பொறியியல் தொழில் நுட்பம் (E-TEC)-05

4.உயிரியல் தொழில்நுட்பம் (B-TEC)-05

5.வர்த்தகம்-08

6.கலைத்துறை-05

இதனுடன் இணைந்ததாக QS ,Bsc,APPLIED SCIENCE ஆகிய துறைகளுக்கும் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன், இதே காலத்தில் தொழில் கல்விப் பிரிவில் VOCATIONAL  STREAM) 32 மாணவர்கள் பயிற்சி பெற்று தற்போது NVQ LEVAL சான்றிதழ்கள் பெற்று தொழிற் துறைக்குள் பிரவேசித்துள்ளனர்.


மேலும், மருத்துவத்துறையில் மாவட்ட ரீதியான 2ஆம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் பாடசாலை வரலாற்றில் பொறியியல் தொழில் நுட்ப பாடத்தில் A சித்தி கிடைக்கப் பெற்றுள்ளது .மற்றும் (B-TEC) பாடத்தில் மாவட்ட ரீதியாக 5ஆம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.


குறிப்பாக இப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை வீடுகளில் தங்கவிடாது பெற்றோர் ஒன்று கூடல் மூலமாக பாடசாலைக்கு அழைத்து பரீட்சை நடைபெறும் வரை விசேடமாக பாடங்கள் மற்றும் கருத்தரங்குகள் புதிய அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்களின் வழிகாட்டலில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்


இவ்வாறான மாபெரும் வெற்றியினை பெற்றுத்தந்து பாடசாலையின் புகழை உலகிற்கு உணர்த்திய உயர்தரம் கற்பிக்கும் உன்னத ஆசான்கள்,உயர்தர வலயத்தலைவர்கள், பிரிவு இணைப்பாளர்கள் மற்றும் பரீட்சையில் சித்தியெய்திய மாணவச்செல்வங்கள் ,ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள் என யாவருக்கும் கல்லூரி அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி நிற்கின்றார்.


மேலும், ஆலோசனைகள் வழங்கிய அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளுக்கும் அதிபர் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்.