கடமைகளை பொறுப்பேற்றார்.





 சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கடமைகளை பொறுப்பேற்றார். 


நூருல் ஹுதா உமர் 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம். ஜாபீர் இன்று (17) கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். 


சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த டாக்டர் எஸ்.எம். செய்யத் உமர் மௌலானா அவர்கள் கடந்த வாரம் காலமானதையடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி.திஸாநாயக்க அவர்களினால் எம்.எச்.எம். ஜாபீர் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை நிறைவேற்றும் விதமாக நியமிக்கப்பட்டுள்ளார். 


சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் 08 வருடங்கள் அளவில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும், பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய அனுபவம் கொண்ட எம்.எச்.எம். ஜாபீர் அவர்கள் வலயக்கல்வி பணிப்பாளரின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், இரண்டு கல்வி வலயங்களையும் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.