சம்மாந்துறை கல்விப் புலத்தில் புதிய நியமனங்கள்!




 


(வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலயத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிய நியமனக் கடிதங்களை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா வழங்கி வைத்தார்.

சம்மாந்துறை வலய நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யசீர் அரபாத் மொகைடீன் இதனை அறிவித்தார்.

கல்வி முகாமைத்துவ பிரதி கல்விப் பணிப்பாளராக எச்.
நைரூஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஏலவே இப்பதவியை அலங்கரித்த திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் மட்டக்களப்பு வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து இவ்வெற்றிடம் ஏற்பட்டது.

அதேவேளை, கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராக பி.பரமதயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏலவே இப்பதவியை அலங்கரித்த ஏ.எல். அப்துல் மஜீத் அக்கரைப்பற்று வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து   இவ்வெற்றிடம் ஏற்பட்டது.

திட்டமிடல் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் 
திருமதி ஏசி.நுஸ்ரத் நிலோபரா சம்மாந்துறை கோட்டக் கல்விப்பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏலவே இப்பதவியை அலங்கரித்த ஏ.நசீர் திருக்கோவில் வலயத்திற்கு இடமாற்றலாகிச் சென்றதையடுத்து இவ்வெற்றிடம் ஏற்பட்டது.