உக்கிரமடைந்துள்ள கடல் அரிப்பு





 நூருல் ஹுதா உமர்


கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதால் அதனை தடுப்பதற்கு கடந்த வாரம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களையும் அமைச்சின் செயலாளரும், கரையோரப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் ரணவக்க ஆகியோரை சந்தித்து உடனடியாக தடுப்பு அணைகளை நிர்மாணிக்க வேண்டுகோளை விடுத்தார்.

இதனையடுத்து இவ் வேலைத்திட்டம் இன்று (30) முதற்கட்டமாக வேலைகளை ஆரம்பிப்பதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலரிப்பு முதல் கட்ட வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, உதவி ஆணையாளர் ஏ.சி.எம்.அசீம், பொறியியலாளர் அப்துல் ஹலீம் ஜெளஸி அப்துல் ஜப்பார், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.சி.எம் சத்தார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், கரையோர மீனவர் சங்க பிரதிநிதிகள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்கு துரிதமாக செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸிக்கு கல்முனை மக்கள் நன்றிகளையும்,பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர். இதேவேளை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரால் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பை தடுப்பதற்குரிய தடுப்பணைகள் இடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.