பாலர் விளையாட்டு நிகழ்வும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வும்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் விளையாட்டு நிகழ்வும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வும் அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வெளிவீதி பிரதேசத்தில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபக தலைவரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அருளாளராக ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக வசந்தன் குருக்களும் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண முன்பள்ளி இணைப்பாளர்; மோகனதாஸ் மற்றும் ஆலய தலைவர் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் கைவிசேடம் வழங்கி வைக்கப்பட்டது.
பின்னராக நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் பாலர் பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இறுதியாக போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் பரிசுகள் என வழங்கி வைக்கப்பட்டன.
பாலர் பாடசாலை மாணவர்களை சிறப்புற கற்பித்த ஆசிரியைகளும் இதன்போது பாராட்டப்பட்டனர்.