கௌரவிப்பு





( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய அறநெறி ஆக்கற்திறன் போட்டிகளில் சாதனை படைத்த 40 அறநெறி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு திருக்கோவில் பாலக்குடா பாலவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையில் நேற்று (5)இடம் பெற்றது.

தேசிய ரீதியில்  தெரிவான குருகுல மாணவன் 
ஜெயராஜா யுவராஜ் உள்ளிட்ட நாற்பது மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் நடாத்தி வரும் 11 அறநெறிப் பாடசாலைகள் இணைந்து நாவுக்கரசர் பெருமானுடைய குரு பூசை தினத்தை சிறப்பாக நடாத்திய போது இக் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

 குருகுல ஸ்தாபகர் பணிப்பாளர் கண.இராசரெட்ணம் தலைமையில் குருபூஜையும் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன.

பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் த.உதயகுமார் கலந்து சிறப்பித்தார். ஏனைய அதிதிகளும் கலந்து கொண்டனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

 அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.