நிதியுதவி





 (எஸ்.அஷ்ரப்கான்)


கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் வாகன கொள்வனவுக்காக பெருந்தொகை பண காசோலையை அமைப்பினரிடம் மயோன் குறூப் தவிசாளர், சமூக சேவையாளர் ரிஸ்லி முஸ்தபா கையளித்தார்.

குறித்த நிகழ்வு நேற்று இரவு  (19.05.2024) அமைப்பின் காரியாலயத்தில் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம். எம்.மர்சூக் தலைமையில் 
இடம்பெற்றது.

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் இவ் சேவைக்கு ஆதரவு வழங்கி ஊக்குவிக்கும் நோக்கில்  ஜனாஸா நலன்புரி சேவைக்கு வாகன கொள்வனவுக்காக இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
          
இந்த நிகழ்வில் யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின்  செயலாளர் எம்.வை.பாயிஸ்,  கணக்கு பரிசோதகர் ஏ.சி.பெளசர் முகாமையாளர் ஏ.வி அர்ஷாத், உப தலைவர் ஏ. எம்.ஹில்மி,  உப பொருளாளர் எம்.எச். இக்ரம் உட்பட உயர் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

இங்கு நிதிக்கான காசோலையை கையளித்த ரிஸ்லி முஸ்தபா உரையாற்றும் போது,

இஹ்லாசான எண்ணத்துடன் இந்த சேவையை செய்து வருகிறபோது சகல தேவைகளையும் இறைவன் பூரணமாக்கி தருவான். பாரிய நன்மையை ஈட்டித் தரும் இந்த சேவையில் இளைஞர்கள் இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.

மிகச் சிறப்பான இந்த சேவைக்கு என்னால் 
முடியுமான சகல ஒத்துழைப்புகளையும் எதிர்காலத்திலும் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இவர்களுக்கு யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் கல்முனை மக்கள் சார்பாக  நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெறிவித்துக் கொள்வதாக யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எம்.மர்சூக்  தெரிவித்தார்.