நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மிக நீண்ட காலமாக ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி மாகாண அலுவலகத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்கின்ற டாக்டர் எம்.ஏ நபீல் மற்றும் பிராந்திய பற் சிகிச்சை நிபுணராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்கின்ற டாக்டர் எம்.ஏ.எம். சரூக் ஆகியோருக்கு இன்று பிரிவு தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் சேவை நலன் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் டாகடர் எம்.ஏ நபீல் மற்றும் டாக்டர் எம்.ஏ.எம். சரூக் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த வைபவத்தில் முன்னாள் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான எம்.பீ.அப்துல் வாஜித் அவர்கள் நினைவுப் பேருரை ஒன்றை ஆற்றியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தார்
Post a Comment
Post a Comment