*நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு இலங்கை இராணுவ தளபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பியவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்ட அவதூறு சம்பந்தமான வீடியோக்களை உடனடியாக நீக்குமாறு நிபந்தனையுடன் கூடிய கட்டளையை விதித்தது*
இலங்கை இராணுவ தளபதி விககும் லியனகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சட்ட தரணி எம் கே எம் பர்ஸான் ஊடாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் தாக்கல் செய்த மனுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி இவ்வாறான அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும் என எடுத்துக்காட்டினார் இதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வழக்கில் பிரதிவாதிகளாக ஆக்கப்பட்டு இருந்த சாலிய ரணவக்க அவரது இரண்டு வலைத்தளங்கள் மற்றும் YouTube தளம் போன்றவற்றிற்கு அந்த வீடியோக்களை உடனடியாக அகற்றுமாறு நிப்பந்தடையுடன் கூடிய கட்டளையை விதித்தார்.
Post a Comment
Post a Comment