இலங்கையின் மிக நீண்ட சந்நதி - கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்!





 ( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு 
செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை இன்று  11ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமாகிறது.

செல்வச் சந்நிதி ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ சாரங்கன் குருக்களின் விஷேட பூஜை காலை 6 மணிக்கு இடம்பெறும்.

சாரங்கன் குருக்கள் பிரதான வேலை பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமியிடம் வழங்கி வழியனுப்பி வைக்கவிருக்கிறார்.

அதனையடுத்து மோகன் சுவாமிகளின் காலை ஆகார மகேஸ்வர பூஜை இடம்பெறும்.

பாதயாத்திரைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் சுமார்  60 யாத்திரீகர்கள் இணைந்து கொள்வதாகவும் பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.



இன்று சனிக்கிழமை பகல் ஆவரங்கால் சென்று இரவு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தங்குவார்கள்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 55நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படுகின்றது.

சந்நதி கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23-வது வருடமாக இப் பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது  குறிப்பிடத்தக்கது.