கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு கிடைக்காவிடின் பணிப்பகிஷ்கரிப்பு தீவிரப்படுத்தப்படும்





 பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(08) கூடுகின்றது.

இந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று ஏழாவது நாளாகவும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்ப காரணமாக 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு இன்று உரிய தீர்வு வழங்கப்படாவிடின் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக S.பிரியந்த தெரிவித்துள்ளார்.