கடமை பொறுப்பேற்பு





(  வி.ரி.சகாதேவராஜா)

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் ஆகியவற்றின் 17 வது பெருந்தலைவர் அதிவணக்கத்துக்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜீ தனது,
 சங்க குருவிற்கான வாசஸ்தலத்திற்கு இன்று(2) வியாழக்கிழமை எழுந்தருளினார்.

அந்த நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷனின் உயர்பீட சுவாமிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார்.


அவர்  கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பேலூர் மடத்தில் நடைபெற்ற மடத்தின் அறங்காவலர்கள் குழு மற்றும் மிஷனின் நிர்வாகக் குழு கூட்டத்தில்
 ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் 17 வதுதலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவயது நியமனத்தை அடுத்து இந்திய பிரதமர் மோடி நேரடியாக சென்று அவரை வாழ்த்தியிருந்தார்.

அகில உலக ராமகிருஷ்ண மிஷனின் 16 வது  பெருந்தலைவர் அதி வணக்கத்திற்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ்  கடந்த மாதம்  தனது 94 வது வயதில் இயற்கையெய்தியதை அடுத்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.