தொண்டு நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம்




 


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம், அலிகம்பே பிரதேசத்தில் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றினால் சுமார் 25 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று அப்பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்காக சுகாதார திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், அலிகம்பை கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை எஸ்.ஜெகநாதன், பிராந்திய திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ். ஷாபி, பிராந்திய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி பீ.அகிலன், பனங்காடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம்.சக்கீல் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட அப்பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அலிகம்பை பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலை ஒன்று திறந்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.