தொழிலாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்




 


#தொழிலாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.....


ஏ.றயீஸ் முப்தி (ஹாமிதி)

________------_________------_________

إن الله يحب العبد المؤمن المحترف

#உழைக்கும் முஃமினான அடியானை அல்லாஹ் விரும்புகிறான்.(தபறானி)


தொழிலாளர்கள் பற்றி பேசப்படும் அனைத்து தத்துவங்களையும்  #இஸ்லாம் #முந்தியுள்ளது.


நீங்கள் உதவி செய்யப்படுவதும், தாராளமாக உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படுவதும் உங்களுடன் இருக்கும் பலவீனர்களின் காரணமாகத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.


#உழைப்பை ஊக்குவிக்கும் மார்க்கம் சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாப்பும் தேடியுள்ளது.

உழைக்காமல் இருப்பதை விரும்புவதில்லை.

اللهم إني أعوذ بك من العجز والكسل


#அல்லாஹ்விற்கு பிடித்த கரம் உழைக்கும் கரம்.


#தனது கும்பத்துக்காக உழைப்பவன் அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்பவருக்கு நிகரானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

الكاد على عياله كالمجاهد في سبيل الله 


நோன்பால், தொழுகையால் மன்னிக்கப்பட  முடியாத சில பாவங்கள் உள்ளன, ஆனால் ஒரு #தொழிலாளியின் நெற்றி வியர்வை அவைகளை மன்னித்து விடும்.

 إن من الذنوب ما لا يكفره صوم ولا صلاة ويكفره عرق الجبين في طلب الحرفة


#அடுத்தவனை நம்பி வாழ்வதை விட உழைத்து வாழ வேண்டும் என்று வழிகாட்டுகிறது இஸ்லாம்.

والذي نفسي بيده لأن يأخذ أحدكم حبله فيحتطب على ظهره خير له من أن يأتي رجلا فيسأله أعطاه أو منعه.


#முதலாளி_தொழிலாளர் விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.


#தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என்றால் நான் மறுமையில் வாதாடுவேன் என்றும், 

அவர்களின் சம்பளத்தை இழுத்தடிப்பு செய்யக்கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

إنا خصمهم يوم القيامة ومنهم ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعطه أجره..

أعطوا الأجير أجره قبل أن يجف عرقه


#தொழிலாளர்களுக்கு இபாதத் (தொழுவதற்கு) அவகாசம் கொடுங்கள்.


நல்ல மனிதர்களின் அடையாளமாக அல்குர்ஆன் கூறும்போது ....


அவர்களின் தொழில் அல்லாஹ்வை ஞாபகம் செய்வது , தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும் தூரமாக்கிவிடாது

رجال لاتلهيهم تجارة ولا بيع عن ذكر الله وعن إقام  الصلوة.. 


#மருத்துவச் செலவுகளை பொறுப்பெடுங்கள்.


தொழிலாளர்களின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு பிடித்த அமலாக மாறிவிடுகிறது. 

أحب الأعمال إلى الله سرور يدخله على مسلم. ..


#தொழிலாளர் தினத்தில் மாத்திரம் தொழிலாளரை கொண்டாடாமல் தொழிற் செய்யும் காலமெல்லாம் கொண்டாடுங்கள்.


நபி(ஸல்) அவர்களின் மரண நேரத்தில் செய்த இறுதி வஸிய்யதை நாம் யாரும் அறியாமல் இல்லை.......

"#தொழுகை! தொழுகை!


#உங்கள்_பொறுப்பில்_உள்ளவர்கள்! கவனம் !!!"