( வி.ரி.சகாதேவராஜா)
பதவி என்பது அமானிதம் அதனை நான் தூய்மையாக பாதுகாப்பேன். இறைவனின் நாட்டப்படியே எல்லாம் நடைபெறும். அதனடிப்படையில் அல்லாஹ் எனக்கு நாடியிருக்கின்றான்.
இவ்வாறு
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்றபின் உரையாற்றிய எம் எச் எம்.ஜாபீர் தெரிவித்தார்.
அவரை கல்விசார் உத்தியோகத்தர்கள் சார்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எச்.நைரூஸ்கான் திருமதி நிலோபரா சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் மாலை சூட்டி வரவேற்றார்கள் .
சம்மாந்துறை வலய அதிபர் சங்கத்தின் தலைவர் .முத்தலிப் மாலை அணிவிக்க செயலாளர் நிஹால் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
கடமையே ற்கும் நிகழ்வுகள் பிரதிக் கல்வி பணிப்பாளர் எச்.நைறோஸ்கான் தலைமையில் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்முனை வலயக்கல்வி பணிமனை சார்பில் கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
கடமையேற்ற பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளர் உரையாற்றும் போது
சம்மாந்துறை வலயத்தினை மேலும் முன்னேற்றுவதற்கு எனது சக்திக்கு அப்பால் செயல்படுவேன். அந்த வகையில் நீங்கள் பெரிய பொறுப்பினை சுமந்திருக்கிறீர்கள் இனிவரும் காலம் என்னுடன் சேர்ந்து குழுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
Post a Comment
Post a Comment