எரிபொருள் விலைகள் குறைப்பு




 


நாடு முழுவதும் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலாய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தம் செய்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல்  ஒரு லீற்றரின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலையாக 317 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.