வி.சுகிர்தகுமார் 0777113659 சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு விழிப்பூட்டல் நிகழ்வுகள் இன்று (31) இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கும் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு கொடி விற்பனை அறிமுக நிகழ்லும் இ;ன்று இடம்பெற்றது.
சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் ஒருங்கிணைப்பில் உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் வளவாளராக கலந்து கொண்டார்.
இதன்போது சமுர்த்தி திட்ட முகாமையாளர் கமலபிரபா வங்கி முகாமையாளர் சுரேஸ்காந்த் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு கொடி அறிமுக நிகழ்வு இடம்பெற்றதுடன் கொடி விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து புகைத்தல் மற்றும் மது பாவனையால் நாளாந்தம் ஏற்படும் மரணங்கள் குடும்ப வன்முறைகள் சமூக சீர்கேடுகள் தொடர்பான விளக்கத்தினை உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் வளவாளரான வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
Post a Comment
Post a Comment