நிதி ஒதுக்கீடு





 நூருல் ஹுதா உமர் 


காரைதீவு பிரதேச சபை மற்றும் காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு பிரதேச பொது நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணம் இன்று மாளிகைக்காட்டில் வைத்து கையளிக்கப்பட்டது. 

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் அலுவலக தேவைகளுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான ஆவணத்தை அமைப்பின் தலைவர் ஏ.எல்.அன்வரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் வைத்து கையளித்தார். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் விரிவுரையாளர் ஏ. கலீலுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச். நாஸர், அல்- ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.சி.எம். நளீம், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழு உறுப்பினர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.