சட்ட விரோதமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லி லீற்றர், கோடா கசிப்பு மற்றும் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த இருவருக்கும் ரூபா முன்று இலட்சம் அபராதம் இன்றைய தினம் விதிக்கப்பட்டது.
இன்றைய தினம் குறித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவர்,அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சட்ட விரோதமாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மில்லி லீற்றர், கோடா கசிப்பு வைத்திருந்த குற்றவாளி ஒவ்வொருக்கும் தலா ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா வீதமும், அதனைக் காய்ச்சும் உபகரணங்களை வைத்திருந்தமைக்காக ருபா இருபத்தையாயிரமும் விதிக்கப்பட்டது. ஒரு குற்றவாளிக்கு ரூபா 150 000.00 தண்டப்பணம் விதிக்கப்ட்டது. இருவருக்கும் ரூபா மூன்று இலட்சம் தண்டப் பணமானது அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களினால் விதிக்ககப்பட்டது.
Post a Comment