கத்தாரில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு




 


நூருல் ஹுதா உமர் 


கத்தாரில் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வரும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல சங்கம், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கத்தார் ஹமாத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை கத்தார் தோஹாவில் நடத்தியது.


இதில் ஹமாத் மருத்துவமனையின் மருத்துவ மேலாளர் திருமதி. சாதிக்கா ஸ்மாயில் அப்பாஸ், அமைப்பின் தலைவர் திரு. தாகீர் அவர்களுடன் இணைந்து சிறப்புரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார்.  

மேலும் ஐ.சி.சி பொதுச் செயலாளர் திரு. மோகன் குமார், ஐ.சி.பி.எஃப் பொதுச் செயலாளர் வர்க்கி போபன், ஐ.சி.பி.எஃப் காப்பீடு மற்றும் சமூக நலன் தலைவர் திரு. அப்துல் ரகூப், தொழிலதிபர் திரு. யாழினி குமார், தி.மு.க அயலக அணி பொறுப்பாளர் திரு.மதன், ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான ஜே.எம் பாஸித் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.