(வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை கல்வி வலயத்திலிருந்து இம்முறையும் தேசிய மட்ட ஒலிம்பியாட் (கணிதம் ) போட்டியில் தெரிவாகியுள்ள
மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய சாதனை மாணவி சிவரூபன் ஜினோதிகாவிற்கு ஊக்குவிப்பு உதவி வழங்கி வைக்கப்பட்டது.
லண்டன் கற்பகப்பிள்ளையார் ஆலய சபையின் இலங்கைக்கான இணைப்பாளரும் இலங்கை அகிலன் பவுண்டேசனின் உதவிப்பணிப்பாளருமான கலாநிதி விஆர். மகேந்திரனிடம் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவ் ஊக்குவிப்பு உதவி நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவின் ஸ்ரீமத் பரசமய கோளறி நாதர் ஆதீன 39 ஆவது குரு மகா சன்னிதான பீடத் தலைவர் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் அதனை மாணவிக்கு வழங்கி வைத்தார்.
அச்சமயம் அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன்,சமூக செயற்பாட்டாளர்களான முன்னாள் தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தா. பிரதீபன் ஆகியோரும் சுவாமிகளின் இந்திய பிரதிநிதிகளும் மாணவியின் பெற்றோரும் கலந்து கொண்டார்கள்.
இம்முறை தெரிவான மற்றுமொரு மாணவி மதுஸ்காவிற்கும் இவ் வுதவி இவ்வாரம் வழங்கி வைக்கப்படும் என வீஆர் மகேந்திரன், பணிப்பாளர் சகாவிடம் உறுதியளித்தார்.
Post a Comment
Post a Comment