(எம்.என்.எம்.அப்ராஸ்)
கடலரிப்பினால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள கல்முனை சிறுவர் பூங்கா ...!
அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் கல்முனை கடற்கரை சிறுவர் பூங்கா என அழைக்கப்படும் பகுதி பாதிப்புக்குள்ளாகி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
கடற்கரை சிறுவர் பூங்காவில் காணப்படும் தடுப்பு சுவரின் ஒரு பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன்,
மேலும் கடலரிப்பு அதிகரிக்குமிடத்து பூரணமாக தடுப்பு சுவர் விழும் நிலையில் உள்ளதுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களும்,அருகில் உள்ள மீனவர் ஓய்வு அறை கட்டிடமும் மீன்பிடி வாடிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் காணப்படுகின்றது.
மேலும் கடலரிப்பு காரணமாக கடலுக்குள் காணப்படும் கட்டிட இடிபாடுகள் காரணமாக குறிப்பாக கரைவலை மீன்பிடியில் இடுபடும் மீனவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே,தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு மற்றும் கடற்கரை சிறுவர் பூங்கா அண்டிய பிரதேசங்களை பாதுகாக்க உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
MNM.Afras
0772961631
journulist
Post a Comment
Post a Comment